­இ­லங்கை மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் போட்டித் தொடரின் முத­லா­வது போட்டி தரம்­சா­லாவில் இன்று  முற்­பகல் 11. 30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

உப்புல் தரங்­க­வுக்கு பதி­லாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் ‍ பொறுப்­பை­ ஏற்­றுள்ள திசர பெரேரா,  இலங்கை அணியை வழி­ந­டத்­த­வுள்ளார். இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். 

இது­வரை இரு அணி­களும் 155 போட்­டி­களில் ஒன்­றை­யொன்று சந்­தித்­துள்­ள­துடன், இதில் இந்­தியா 88 போட்­டி­க­ளிலும் இலங்கை 55 போட்­டி­களிலும் வெற்றி பெற்­றுள்­ளன. ஏனை­ய­ 11 போட்­டிகளில் முடி­வுகள் எட்­டப்­ப­டா­த­வையாகவும், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சம­நி­லை­யிலும் நிறை­வ­டைந்­துள்­ளன.

அண்­மைக்­கா­ல­மாக தோல்­வி­களால் துவண்டு போயுள்ள இலங்கை அணிக்கு, அதி­ரடித் துடுப்­பாட்ட வீர­ ரான குசல் பெரேரா மற்றும் சகல துறை வீர­ரான அசேல குண­ரட்ன ஆகி­யோரின் மீள் வருகை இலங்கை அணிக்கு வெற்­றியை தேடிக் கொடுக்கும் என கிரிக்கெட் விமர்­ச­கர்கள் கரு­து­கின்­றனர். 

இந்­நி­லையில், தொடர்ச்­சி­யாக 12 தோல்­வி­களை சந்­தித்­துள்ள இலங்கை அணி இன்­றைய போட்­டியில் வெற்றி பெற்று ‍தொடர்  தோல்­விக்கு முற்­று­புள்ளி வைக்குமா அல்­லது 13 ஆக உய­ரு­மா? என்­பதை பொறுத்­தி­ருந்துதான் பார்க்­க­வேண்டும். 

இரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டாவது போட்டி 13 ஆம் திகதியன்றும் , மூன்றாவது போட்டி 17 ஆம் திகதியன்றும் நடை பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது..