கிழக்கு ஜேர்மனியில் உள்ள ஆல்வின் என்ற முழு கிராமமே 125,000 யூரோக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் பல கட்டிடங்கள் உள்ள நிலையில் வயதான 20 நபர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிறன்று கிராமத்தின் நுழைவாயிலில் முழு கிராமத்தையே 125,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விடுவதாக விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. 

இரண்டாம் உலகப்போரின் போது இக்கிராமத்தை சுற்றியுள்ள இடங்களில் இளைஞர்களுக்கு ஹிட்லர் பயிற்சி அளித்தாராம்.

1960ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி ஒன்றாக இணைந்தபோது 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்ததாகவும் 1991ஆம் ஆண்டு Coal Briquette Plant மூடப்பட்டபோது பலரும் வேலைக்காக கிராமத்தை காலிசெய்ததாகவும் Andreas Claus என்ற மேயர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிராமத்தை காலி செய்துவிட்டு மேற்கு ஜேர்மனி நோக்கி சென்ற இளைஞர்கள் மீண்டும் திரும்பிவரவில்லை என 1945ஆம் ஆண்டில் இருந்து வசித்து வரும் Peter Kroll என்பவர் தெரிவித்துள்ளார்.