கடுவல - பத்தரமுல்ல பிரதான வீதியில், இன்று (9) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரிகள் இருவர் பலியாகினர். இச்சம்பவம், மேற்படி வீதியின் எட்டாவது மைல் கல்லருகே இடம்பெற்றது.

பத்தரமுல்ல நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜீப் வண்டியொன்று, பாதையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியதிலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியிலேயே உயிரிழந்தனர். அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

விபத்தையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், ஜீப்பின் சாரதி மது அருந்தியிருந்ததாகத் தெரிவித்தனர்.