ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலாளர் தகவலை தெரிவித்துள்ளார். 

பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி 12 புகையிரத தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு  அஞ்சல் சேவை ஸ்தம்பிதம் அடைந்ததுடன், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். 

எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக புகையிரத சேவை பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் அதனை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி இன்று கையெழுத்திட்டுள்ளார்.