முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சுட்டிக் காட்டியே தினேஷ் குணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர், 154 பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் உயிராபத்து குறித்த புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே இப்பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து உத்தியோகபூர்வமாக கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என்றும் அப்படி விடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.