வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம் எனும் தொனிபொருளிலான வாகன விழிப்புணர்வு ஊர்வல பேரணியும், பொது மக்களிடம் கையச்சு பெறும் நிகழ்வு ஒன்றும் இன்று முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த விழிப்புணர்வு ஊர்வல பேரணியானது இன்று மாலை 3 மணியளவில்  மன்னார் வீதியிலுள்ள காமினி பாடசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கில்கள், முச்சக்கர வண்டிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்த பேரணியானது மன்னார் வீதியூடாக குருமன்காட்டு சந்தியை வந்தடைந்து  மணிக்கூட்டு வீதியூடாக காமினி பாடசாலையை மீண்டும் வந்தடைந்து முடிவுற்றது.

அதன் பின்னர் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தினை கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.  

"பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் தடுப்போம்" எனும் தொனிப்பொருளிலான செயற்பாட்டினை ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து இப்  பேரணியினை மேற்கொண்டிருந்தனர்.