போலி ரூபா தாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று (7) இடம்பெற்றது.

மானிப்பாய் வாசியான 31 வயது நபரே கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து 500 ரூபா போலி நாணயத் தாள்கள் ஒன்பதை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

தமக்குக் கிடைத்த அனாமதேயத் தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபரைத் தாம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று (8) ஆஜர்படுத்தப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.