Update : ரயில்வே வேலைநிறுத்தம் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்தையின் முடிவு இதோ.!

Published By: Robert

08 Dec, 2017 | 04:19 PM
image

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கும், ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து, தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம்  ரயில்வே சாரதிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டத்துடன், நேற்று நள்ளிரவு முதல்  ரயில்வே காப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட மேலும் சில குழுக்களும் இணைந்து கொண்டுள்ளன. 

இதேவேளை, நேற்றைய தினம் போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் குறித்த வேலை நிறுத்தத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று நண்பகல் இடம்பெற்றது.

குறித்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக லோகோமோடிவ் செயற்பாட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்