பிரதமர் விமர்சித்தது விஜயதாஸவை அல்ல

19 Nov, 2015 | 10:58 AM
image

 

எவன்கார்ட் விவ­கா­ரத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­ப­க் ஷவை விமர்­சித்­த­தாக கூறப்­ப­டு­வதில் எந்த உண்­மை­யு­மில்­லை­யென நீதி­ மற்றும் புத்­த­சா­சன அமைச்சு அறி­வித்­துள்­ளது.

Ranil Wickremesinghe

இது தொடர்பில் அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில்,

எவன்கார்ட் விவ­காரம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரை கடு­மை­யாக விமர்­சித்­த­தா­க பத்­தி­ரி­கைகள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. அது மட்­டு­மன்றி விமர்­சிக்­கப்­பட்ட அந்த அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ என பத்­தி­ரி­கை­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரை பிர­தமர் விமர்­சித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் இடம்­ பெற்­ற­போது அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ தாய்­லாந்­துக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்தார். அந்த வகையில் பிர­தமர் விமர்­சிக்­கப்­பட்­ட­வ­ராகக் கூறப்­ப­டுவர் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக் ஷ அல்ல என்­பதை தெரி­விக்­கின்றோம் என்று தெரி­விக்­கப்­பட்­ டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எவன்கார்ட் விவ­காரம் தொடர்பில் சிரேஷ்ட அமைச்­ச­ரொ­ரு­வரை கடு­மை­யாக விமர்­சித்­த­தாக நேற்று முன்­தினம் இரவு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ருக்கு சென்­றி­ருந்த பிர­தமர் இலங்கை திரும்­பி­யு­வுடன் குறித்த சிரேஷ்ட அமைச்­சரை அழை த்து விமர்­சித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி நேற்று முன்­தினம் அலரி மாளி­கைக்கு சென்ற குறித்த சிரேஷ்ட அமைச்­ச­ரிடம் எவன்கார்ட் விவ­காரம் தொடர்பில் அவர் கூறிய கருத்­துக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்று தரு­மாறு பிர­தமர் தெரி­வித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக இதன் பின்னர் எவன்கார்ட் விவ­காரம் தொடர்பில் யாரு­டனும் விவா­தத்­துக்கு செல்ல வேண்­டா­மென குறித்த அமைச்­ச­ருக்கு பிர­தமர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் திலக் மாரப்பனவின் இராஜினாமாவின் பின்னர் அரசாங்கத்துக்கு கிடைத்த கீர்த்தி யும் குறித்த சிரேஷ்ட அமைச்சரின் கருத்துக் களால் இல்லாமல் போவதாக இதன்போது தெரிவித்திருக்கிறார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21