சிசுவின் சடலம் ஒன்றை கட்டுகஸ்தோட்டை, பிங்கா ஒயாவில் இருந்து நேற்று கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி சம்பவ இடத்திற்கு சென்று மீன்கள் சிதைத்துள்ள நிலையில்  சிசுவின் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.

அச் சிசு பிறந்த உடன் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான  மரண விசாரணை கண்டி பிரதான நீதவான் முன்லையில்  இடம் பெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.