பெரு நாட்டில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இறப்புச் சான்றிதழ் கொடுக்க தாமதமாக்கியதால் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டைச் சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்து, சரியான வளர்ச்சியடையாததால் குழந்தை கடந்த திங்கட் கிழமை இறந்து விட்டது. இறப்பு சான்றிதழ் கொடுத்த பிறகே குழந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியும்.

இந்நிலையில் குழந்தைக்கு இறப்பு சான்றிதழை கொடுக்க வைத்தியசாலை தாமதப்படுத்தியது. மேலும் வைத்தியசாலை பாதுகாவலர் கொடுத்த தொந்தரவினால் குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். அதனால் அவரால் சான்றிதழ் பெற முடியவில்லை. அவர் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்துள்ளார்.

செவ்வாய் கிழமை வைத்தியசாலைக்கு சென்று இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் குறித்து வைத்தியசாலை இயக்குனர் ஜூலியோ சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"பெண் கொடுத்த முறைப்பாட்டின்  அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அவருக்கு நேர்ந்தது மிகவும் தவறாகும். காவலாளி வைத்தியசாலை விதிமுறைகளை மீறியுள்ளார். உடலானது இறப்புச் சான்றிதழ் கொடுக்கும் வரை பிரேத அறையில் பாதுகாக்க பட வேண்டும். ஆனால் உடல் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் வைத்தியசாலை நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது" என கூறினார்.