இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் காற்று மாசுபாடு பிரச்சினை எழுந்ததையிட்டு இந்திய மருத்துவ சங்கம் இந் திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

டெல்லியில் இலங்கை – இந்திய அணிகள் மோதிய போட்டியின் போது காற்று மாசுபாடு காரணமாக இலங்கை
வீரர்கள் ‘மாஸ்க்’ அணிந்து விளையாடினர். மேலும், இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக இலங்கை அணி நிர்வாகம் கூறியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம், கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில்,
காற்று மாசுபாடு விளையாட்டு வீரர்களின் உத்வேகம் மற்றும் செயற்பாட்டினை குலைத்து விடுகிறது. இது வெற்றி மற்றும் தோல்வியை மயிரிழையில் மாற்றி விடும்.
மழை, வெளிச்சக் குறைபாடு ஆகியவற்றை ஒரு போட்டிக்கு எவ்வாறு முக்கியமானதாக நீங்கள் கருதுகிறீர்களோ அதே போல, காற்று மாசையும் இனி கருத வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.