மோதரையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். கதிரானவத்தையைச் சேர்ந்த 42 வயது நபரே கடும் காயங்களுக்கு இலக்கானவர் என்று தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர், அயல்வீட்டில் நிகழ்ந்த மரணச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியபோது, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் அவர் மீது சரமாரியாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகிறது.

தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.