தொண்­டமான், திகாம்­பரம் வந்­தாலும் கண்­டியில் நான்தான் தலைவன்

Published By: Priyatharshan

08 Dec, 2017 | 09:50 AM
image

சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­திரம் எனக்கு சேவை செய்ய முடியும். எனினும் எமது கண்டி தோட்­ட­ப்புற தமிழ் மக்­களை பாது­காக்க எவரும் இல்லை. அவர்­க­ளுக்கு நான் தான் தந்­தை­யாகும். அதனால் நான் பல சேவை­களை செய்தேன். எனினும் நல்­லாட்­சியில் ஒன்றும் நடக்­க­வில்லை. நானே சேவை செய்தேன். எனினும் வாக்­குகள் அன்­னத்­திற்கு வழங்­கப்­பட்­ட­தாக கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே சபையில் தமி ழில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை மலை­நாட்டு புதிய கிரா­மங்கள், உட்­கட்­ட­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மை ப்பு, தேசிய கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழி, நல்­லி­ணக்க மற்றும் ஒரு­மை ப்­பாடு அமைச்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான விசேட தெரி­வுக்­கு­ழு­க்களின் அறிக்கை மீதான குழு­நிலை விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

புதிய கிராமம் என்ற பெயரில் அமைச்சு இருந்­தாலும் மலை­ய­கத்தில் இன்னும் பழைய வீடு­களே உள்­ளன. இன்னும் கூட பழைய முறை­மையின் பிர­கா­ரமே மலை­ய­கத்தின் மீதான பார்வை உள்­ளது. நல்­லாட்­சியில் மலை­யக மக்­க­ளுக்கு எந்­த­வொரு பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை. 

கல்வி, மல­சல கூட, சுகா­தார, வீதி பிரச்­சி­னைகள் உள்­ளன. தோட்ட இளை­ஞர்களின் பெறு­பே­றுகள் மிகவும் மோச­மாக உள்­ளன. தோட்ட மாண­வர்­க­ளுக்கு ஆசி­ரி­யர்கள் இல்லை. மாண­வர்கள் பாட­சா­லை­க­ளுக்கு வரு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பும் இல்லை. தற்­போது தோட்­டப் ­புற இளைஞர், யுவ­திகள் கொழும்பு விற்­பனை நிலையங்­களில் கூலிக்­கா­ரர்­க­ளாக வேலை பார்க்­கின்­றனர். 

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் அப்­ப­குதி இளை­ஞர்­க­ளுக்கு எத்­தனை தொழில்­வாய்ப்­புகள் வழங்­கி­யுள்­ளீர்கள்? அமைச்சர் திகாம்­ப­ரத்தை நான் பாராட்­டு­கின்றேன். வீட­மைப்பு திட்­டத்தை சீரான முறையில் முன்­னெ­டுத்து வரு­கின்றார். எனினும் அடிப்­படை பிரச்­சி­னைகள் பல உள்­ளன. எமது ஆட்­சியின் போது முடி­யு­மான அள­விற்கு நாம் சேவை செய்து விட்டோம். நாவ­லப்­பிட்­டியை பொறுத்­த­வ­ரையில் நான் தலை­யிட்டு தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு கட்­டடங்­களை வழங்­கி­யுள்ளேன். எனினும் தற்­போது அங்கு ஆசி­ரி­யர்கள் இல்லை. மாண­வர்கள் வரு­வது இல்லை. இதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். சிங்­கள பிர­தேசங்களில் பொறி­யி­யலாளர்கள், வைத்­தி­யர்கள் உரு­வா­கின்­றனர். எனினும் தோட்டப் பகு­தி­களில் இவ்­வாறு உரு­வா­கு­வ­தில்லை. கல்வி தொடர்பில் அமைச்சர் திகாம்­பரம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். 

எங்கள் காலப்­ப­கு­தியில் வைத்­தி­ய­சா­லைகளை அர­சு­டை­மை­யாக்­கினோம். எனினும் நல்­லாட்­சியில் அந்த வைத்­தி­ய­சாலை­களில் வைத்­தி­யர்கள் இல்லை. அந்த வைத்­தி­ய­சா­லைகள் மீண்டும் கம்­ப­னி­க­ளுக்கே வழங்­கப்­ப­டு­கின்­றன. எனவே இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி ­னர்கள். எமக்கு நவ­லோக வைத்­தி­ய­சா­லைக்கு போக முடியும். எனினும் அப்­பாவி தோட்ட மக்கள் நிலைமை மிகவும் மோச­மாகும். நாவ­ல­ப்பிட்டி வைத்­தி­ய­சா­லை­களை மூடினால் தல­வாக்­­கலை வைத்­தி­ய­சா­லைக்கு போக வேண்டும்.

தேர்­தலின்  போது வராத அர­சியல் தலை­வர்கள் இல்லை. எனினும் தற்­போது எவரும் வரு­வ­தில்லை. அமைச்சர் திகாம்­பரம் நல்ல வீட்டு திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ளார். இதன்­படி நாவ­ல­ப்பிட்­டியில் ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் உள்­ளன. என்­றாலும் பத்து வீடு­களே வழங்­கப்­பட்­டுள்­ளன. தோட்ட மக்கள் லயன் அறை­களில் எவ்­வ­ளவு காலம் இருந்­துள்­ளனர்? 150 வருடங்கள் இருந்­துள்­ளனர். எல்­லோ­ருக்கும் வீடுகள் வழங்க வேண்டும். ஜனா­தி­பதி தேர்­தலில் அன்­னத்­திற்கு வாக்­க­ளித்­தனர். எனினும் நாமே அவர்­க­ளுக்கு சேவை செய்தோம். ஆனால் வாக்கு அன்­னத்­திற்­காகும். 

அத்­துடன் அமைச்சர் திகாம்­பரம் காலத் தில் பெரிய வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும். கண்­டிக்கு அதி­க­மான வீடு­களை வழங்­குங்கள். அமைச்சர் பது­ளையை விட நுவ­ரெ­லி­யா­வுக்கு அதி­க­மாக வழங்க வேண்டும். அப்­போ­துதான் உங்­க­ளுக்கு வாக்கு கிடைக்கும். தற்­போது வீதிகள் தாரி­டப்­ப­டு­கின்­றன. எனினும் ஒரு மாதத்தில் உடைந்து விடு­கின்­றன. ஆனால் எனது காலத்தில் காபட் இட்­டேன். இன்னும் சேத­மா­காமல் உள்­ளது.

கல்வி அமைச்சர்  5000 தொழில்­வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்ளார். எனினும் தோட்­டப்­புற மக்­க­ளுக்கு எத்­தனை கிடைத்­தன? இரா­ஜாங்க அமைச்­ச­ருக்கே இல்லை என்றால் தோட்ட மக்­க­ளுக்கு எப்­படி கிடைக்கும்? அத்­துடன் கண்­டியில் 2 இலட்சம் தமிழர்கள் உள்­ளனர். இது­வரை ஒன்றும் செய்­ய­வி ல்லை.

தற்­போது ஒரு கிலோ அரி­சியின் விலை 100 ரூபா­. தேங்காய் விலை 65 ரூபா­. தோட்ட மக்கள் எப்­படி வாழ்­வது? தொண்­டமான், திகாம்­பரம் வந்­தாலும் கண்­டியில் நான்தான் தலைவன். எனக்கு சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­திரம் சேவை செய்ய முடியும். எனினும் எமது தமிழ் மக்­களை பாது­காக்க எவரும் இல்லை.அவர்­க­ளுக்கு நான் தான் தந்­தை­. அதனால் நான் பல சேவைகளை செய்தேன். என்னுடன் வாருங்கள். அங்குள்ள குறைபாடுகளை காண்பிக்கின்றேன். சிறைச்சாலை அமை ச்சை பொறுத்தவரையில் இந்த அமைச் சுக்கு டி.எம்.சுவாமிநாதன் தகுதியற்றவர்  எனினும் அவர் மிகவும் கெளரவமான நல்ல மனிதர். இந்நிலையில் அமைச்சர் சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள குறை பாடுகளை பார்க்க வேண்டும். சிறையில் இருந்து வெளியே வருபவர் நல்ல மன நிலையுடன் வர வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11