கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் பிரச்­சினை சுமு­க­மாக தீர்க்­கப்­படும் : சுமந்­திரன்

Published By: Priyatharshan

08 Dec, 2017 | 09:31 AM
image

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற பிரச்­சி­னை­களை சம­ர­ச­மாக தீர்க்­க­மு­டியும். இதனை சம­ர­ச­மாகத் தீர்க்­க­வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக உள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். 

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது வீட்டில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள்  ஏற்­பட்­டி­ருக்­கின்ற முறுகல் நிலை­யா­னது சுமு­க­மாக தீர்க்­கப்­படும் என நாம் எதிர்­பார்க்­கின்றோம். ஏனெனில் கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கின்ற ஒரே கொள்­கையை கொண்ட கட்­சிகள் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் பிள­வு­ப­டக்­கூ­டாது என்­பது எமது சிந்­த­னை­யாகும். இது தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் அறி­வு­றுத்­தி­யு­முள்ளார்.

இத் தேர்தல் தொடர்­பான ஆசனப் பங்­கீட்­டினால் ஏற்­பட்ட பிள­வுகள் தொடர்­பாக செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. என்­னோடு நேற்­று­முன்­தினம் இரண்டு மணி­நேரம் கலந்­து­ரை­யா­டினார்.  இதன்­போது நாம் எங்­கெங்கு பிரச்­சினை உள்­ளது என்­பதை கிர­ம­மாக ஆராய்ந்தோம். பிரச்­சி­னை­களை சுமு­க­மாகத் தீர்ப்­ப­தற்­கான வழி­க­ளையும் ஆராய்ந்தோம்.

இதன்­போது தீர்க்க முடி­யாத பிரச்­சினை ஒன்று இருப்­ப­தாக எம்­மி­ரு­வ­ருக்கும் தெரி­ய­வில்லை. ஒவ்­வொரு பிரச்­சி­னை­க­ளுக்கும் ஒவ்­வொரு மாற்­று­வ­ழி­களைக் கண்­டி­ருந்தோம். இவ்­வா­றான நிலையில் நாம் கண்ட தீர்­வு­வ­ழிகள் தொடர்­பாக எம் மாவட்ட தலை­வர்­க­ளோடு நாம் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம்.

இத­ன­டிப்­ப­டையில் இப் பிரச்­சினை தொடர்­பான இணக்­கப்­பாட்­டிற்கு நாம் வந்தால் தொடர்ந்து இணைந்தே பய­ணிப்போம். அந்­த­வ­கையில் இதனை சம­ர­ச­மாகத் தீர்க்க முடியும் என்­ப­திலும் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

தேர்­த­லுக்­காக அவிழ்த்து 

விடப்­படும் கதைகள்.

தற்­போது உரு­வா­கி­யி­ருக்­கின்ற புதிய கூட்­டணி, தமி­ழ­ரசுக் கட்சி, தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்த ஆணையை நிறை­வேற்­ற­வில்லை என்றும் அர­சாங்­கத்தை சர்­வ­தே­சத்தில் காப்­பாற்­று­கின்­றது என்று தேர்தல் காலத்தில் கதை­களை அவிழ்த்து விடு­கின்­றது. அது தொடர்பில் பிர­மிக்க தேவை­யில்லை. தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக உரு­வா­கி­ய­தாகத் தெரி­கின்ற அக்­கூட்­டணி, அதற்­காக சாட்டுப் போக்­கு­க­ளையும் கொள்கை விளக்­கங்­க­ளையும் செய்­கின்­றது.

தமி­ழ­ரசுக் கட்சி அர­சாங்­கத்தை தப்­ப­வைக்க செயற்­ப­டு­கின்­றது என எவரும் கூற­மு­டி­யாது. சர்­வ­தே­சத்தின் அழுத்­த­மா­னது இரண்டு அர­சாங்­கங்கள் மீதும் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தற்கு நாமே கார­ண­மாக இருந்தோம்.

தற்­போது இனப் பிரச்­சி­னைக்குத் தீர்­வாக புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்கம் தொடர்­பாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற செயற்­பாட்டில் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அது எதிர்­கா­லத்தில் வெற்­றி­ய­ளிக்­குமா இல்­லையா என்­பது தொடர்­பாக சாஸ்­திரம் பார்த்து  செயற்­பட முடி­யாது.

இரண்டு முறையும் சர்­வ­தேச அழுத்தம் ஏற்­பட்­ட­போது இலங்கை அர­சாங்கம் தாம் அதனை செய்­வ­தாக கூறி பொறுப்­பெ­டுத்­துள்­ளது. நாம் அர­சாங்கம் ஒன்றை செய்­ய­வேண்டும் என கூறி­ய­போது அவர்கள் அதனை செய்­கின்ற போது நாம் அனு­ச­ரித்தே செல்­ல­வேண்டும். அத்­த­கைய அணு­கு­மு­றையில் சற்று வித்­தி­யாசம் இருக்கும். அதே­போன்று சர்­வ­தே­சமும் அதன் அழுத்­தங்­க­ளு­டனும் செயற்­பட ஆரம்­பிக்­கின்­ற­போது அதன் அணு­கு­மு­றையும் வித்­தி­யாசம் இருக்கும்.

புதிய கூட்­டணி.

தற்­போ­தைய புதிய கூட்­ட­ணியின் சின்­ன­மா­க­வுள்ள உத­ய­சூ­ரியன் சின்னம் 2003ஆம் ஆண்டு ஆனந்­த­சங்­க­ரி­யினால் முடக்­கி­வி­டப்­பட்­ட­தா­லேயே 2004ஆம் ஆண்டு தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு  வீட்டு சின்­னத்தில்  போட்­டி­யிட்­டது.

இவ்­வா­றான நிலையில் தமிழ் மக்கள் சின்­னத்தை பார்த்து வாக்­க­ளிப்­ப­வர்கள் இல்லை. கொள்­கையை பார்த்து அந்தக் கொள்­கையை யார் வைத்­தி­ருக்­கின்­றார்கள், யாரை நம்­பலாம் என ஆராய்ந்து பார்த்தே தமிழ் மக்கள் வாக்­க­ளிப்­ப­வர்கள்.

இந்­நி­லையில் மிக முக்­கி­ய­மான பிர­ப­ல­மான சின்­னத்தை கைப்­பற்றி விட்டோம் என சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மற்றும் ஆனந்­த­சங்­கரி மக்கள் முன்னே சென்று நின்றால் அத்­த­கைய முக்­கிய சின்­னத்­திற்கு மேலும் களங்­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­ற­தா­கவே முடியும்.

பொறுத்­தி­ருக்க வேண்­டிய மக்கள்

 தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற தக­ராறு தொடர்பில் நாம் முதலில் மக்­க­ளிடம் மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­கின்றோம். ஏனெனில் புனித பய­ண­மொன்றில் ஆசன பங்­கீட்­டிற்­காக பிரிந்து செல்­வ­தென்­பது துர­திஸ்­ட­வ­ச­மா­னது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் உள்ள பங்­காளிக் கட்­சிகள் போரா­ளி­க­ளாக, இயக்­கங்­க­ளாக இருந்து கட்­சி­யாக மாறி வந்­த­மையால் அவர்­க­ளுக்கு கட்சி என்ற அடை­யாளம் இல்­லாமல் இருக்கும். அதற்­காக அவர்­களை ஒதுக்­கக்­கூ­டாது. பங்­காளிக் கட்­சிகள் என்ற உரிய இடத்தை தமி­ழ­ரசுக் கட்சி கொடுக்க வேண்டும்.

அதே­போன்று பங்­காளிக் கட்­சி­களும் அதே உரிய இடத்தை தமி­ழ­ரசு கட்­சிக்குக் கொடுக்க வேண்டும். இந்­நி­லையில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பிரச்­சினை சில தினங்­களில் தீர்க்­கப்­பட்டு விடும். எனவே அது­வரை சற்று மக்கள் பொறுத்­தி­ருக்க வேண்டும்.

பிரிவு உறு­தி­யானால் தமி­ழ­ரசு கட்சி தனித்து போட்டி.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பங்காளி கட்சிகள் பிரிந்து செல்லமாட்டார்கள் என்பது எமது நம்பிக்கை. அதற்கான முயற்சிகளை நாம் செய்வோம். அதனையும் மீறி அவர்கள் பிரிந்து செல்வது தான் முடிவென்றால் தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும்.

மேலும் எமது கட்சிக்குள் உள்ளே வரப் போகின்றவர்கள் என கூறுபவர்களைத் தடுக்க முடியாது. ஆனால் தேர்தல் காலங்களில் மாத்திரம் உள்ளே வருவார்களாயின் அதில் சந்தேகமுண்டு. இதேசமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ்., பத்மநாபா அணியினர் இரண்டு ஆண்டுகளாக பேசி வருகின்றார்கள். எனவே அவர்களது விடயம் ஆராய்ந்து பார்க்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27