உறு­தி­யான மாற்று அணி உரு­வா­வதை தடுக்க சுரேஷ் ஏமாற்­றப்­பட்­டுள்ளார்

Published By: Priyatharshan

08 Dec, 2017 | 09:17 AM
image

நேர்­மை­யான, கொள்­கையில் உறு­தி­யான விட்­டுக்­கொ­டுப்­பின்­றிய மாற்றுத் தலைமை உரு­வாகக் கூடாது என்ற தேவை இலங்கை அர­சுக்கு மட்­டு­மன்றி பல வல்­ல­ரசு நாடு­க­ளுக்கும் இருக்­கின்­றது. தமிழ் மக்­களின் மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்க வேண்டும் என்ற நிலைப்­பாடு இவர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

 தூய்­மை­யான மாற்று அணி உரு­வா­வதைத் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. துர­திஷ்­ட­வ­ச­மாக சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை ஏமாற்றி அந்த முயற்­சிக்கு அவரை துணை­போக வைத்­துள்­ளனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்­கின்­ற­வர்கள், வட­கி­ழக்கு இணைப்பு சாத்­தி­ய­மில்லை எனக்­கூ­று­ப­வர்கள்,  சுய­நிர்­ணய உரி­மையை நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டிய ஒரு கொள்­கை­யாக வெளிப்­ப­டுத்தி வரு­ப­வர்­க­ளுடன் இணைந்­துதான் புதிய கூட்­டணி உரு­வா­கி­யுள்­ளது. இதன்­மூலம் மக்­களை நேர்­மை­யாக வழி­ந­டத்தக் கூடிய அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. ஆகவே இந்தக் கூட்­டணி மக்­களை ஏமாற்­று­கின்ற கூட்­டா­கத்தான் மாறும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் அலு­வ­ல­கத்தில் நேற்று  நடத்­திய ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழர் விடு­தலைக் கூட்­டணி ஒரு பொருத்­த­மான கட்­சி­யல்ல. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­துவம் தொடர்­பாக நாங்கள் விமர்­சிக்­கின்றோம் என்றால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ற அமைப்பை எதிர்க்­க­வேண்டும் என்­ப­தற்­காக அல்ல. ஒரு தேர்தல் அர­சி­ய­லுக்­காக தமிழ் மக்கள் பேர­வையோ, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியோ , ஈ.பி.ஆர்.எல்.எப் கட்­சியோ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையை எதிர்க்­க­வில்லை. எங்­களைப் பொறுத்­த­வரை கொள்ளை ரீதி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிழை விடு­கின்­றது. நிச்­ச­ய­மாக அர­சாங்க தரப்­புக்கு விலை போய் இருக்­கின்­றது. தமிழ் மக்­க­ளு­டைய அடிப்­படை அர­சியல் அபி­லா­ஷை­களை மீறு­கின்ற வகையில் ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வந்து தமிழ் மக்­க­ளிடம் விற்றுக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதனை எதிர்க்­க­வேண்டும். 

தமிழ் மக்கள் இவ்­வ­ளவு தூரம் தியா­கங்கள் செய்தும் ஒற்­றை­யாட்­சிக்கு ஆணை­யி­டக்­கூ­டாது. தற்­போது இடைக்­கால அறிக்­கை­யொன்று வெளி­வந்­துள்ள நிலையில் இந்த விட­யங்கள் சந்­தே­கத்­திற்கு அப்பால்  நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­கைய தீர்வை ஏற்­றுக்­கொள்ளும்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்புத் தலை­மை­களின் செயற்­பாட்டை எதிர்த்து நிற்­க­வேண்டும். ஆகவே அந்தக் கொள்கைச் செயற்­பா­டுகள் பிழை என்­பதைக் கூறி மாற்றுக் கூட்­டுத்­த­லை­மைத்­து­வத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கின்ற நிலையில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் சேர்ந்தால் கொள்கை ரீதி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை விமர்­சிக்க முடி­யாத நிலைக்குத் நாங்கள் தள்­ளப்­ப­டுவோம். 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போது தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் சின்­னத்­தில்தான் போட்­டி­யிட்டோம். அதற்குப் பிற்­பாடு தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர் ஆனந்­த­சங்­கரி மற்றும் அவ­ரு­டைய கட்சி உறுப்­பி­னர்­களும் தேசிய விடு­தலைப் போராட்­டத்­திற்கு மாறாக செயற்­பட்­ட­மை­யி­னாலும் குறைந்த பட்ச தீர்வை ஏற்­றுக்­கொண்­ட­மை­யி­னாலும் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் கட்சி சின்­னத்தை கைவிட்டு தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்­னத்தில் இயங்­கு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­தது. 

போர் நடை­பெற்ற காலப்­ப­கு­தி­யிலும் கூட கொள்கை ரீதி­யாக எதிர்த்­தது மட்­டு­மன்றி தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைவர், ஈ.பி.டி.பி. கட்சி தலைவர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுடன் உலக நாடு­க­ளுக்குச் சென்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நடத்­திய போரை நியா­யப்­பத்­தி­யவர் என்ற வகையில் அந்தக் கட்­சி­யுடன் சேரு­வது பொருத்­த­மா­ன­தல்ல.  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மைத்­துவம் குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வர்கள் சம்­பந்தன் போன்­ற­வர்கள் பேருக்­கா­வது சமஷ்­டியைப் பற்றிக் கதைக்­கி­றார்கள். 

தேர்­தலில் வாக்கு எடுப்­ப­தற்­கா­க­வா­வது சுய­நிர்­ணய உரிமை பற்றி வட­கி­ழக்கு இணைப்புப் பற்றி பேசு­கி­றார்கள். ஒற்­றை­யாட்­சியை நிரா­க­ரிக்­கிறோம் எனப் பேசு­கி­றார்கள். ஆனால் இங்கு ஆனந்­த­சங்­கரி இவற்றை நிரா­க­ரிக்­கின்ற கொள்கை உடை­ய­வ­ராக உள்ளார். அவ­ருடன் சேரு­வதன் மூலம் ஆரோக்­கி­ய­மான நேர்­மை­யான ஒரு கொள்­கையை முன்­னுக்குக் கொண்டு செல்ல முடி­யாது. மக்­களை நேர்­மை­யாக வழி­ந­டத்தக் கூடிய அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­ப­மு­டி­யாது. அப்­ப­டிப்­பட்ட கூட்டு மக்­களை ஏமாற்­று­கின்ற கூட்­டா­கத்தான்  மாறும். 

அது­மட்­டு­மல்­லாமல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்­கக்­கூ­டிய குற்­றச்­சாட்டு குறிப்­பாக சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வைக்­கின்ற குற்­றச்­சாட்­டுக்கள், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பேருக்கு மட்­டும்தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாக இருக்­கின்­றதே தவிர தமி­ழ­ரசுக் கட்­சி­யில்தான் இருக்­கின்­றது. தமி­ழ­ரசுக் கட்­சியின் முடிவே கூட்­ட­மைப்பின் முடி­வாக இருக்­கின்­றது. தங்­க­ளு­டைய கட்சி ஆதிக்கம் செலுத்­த­மு­டி­யாது. தம்மை கணக்­கெ­டுப்­பதே இல்லை என்­ப­வை­யே­யாகும்.

ஆகவே தமி­ழ­ரசுக் கட்­சியின் சின்­னத்­திலோ பேரிலோ போட்­டி­யி­ட­மு­டி­யாது. அது உண்­மை­யான கூட்­ட­மைப்­பாக மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்டும் என்று கூறியே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வெளி­யே­றினார். இங்கு தமிழர் விடு­தலைக் கூட்­டணி பேருக்­குத்தான் கூட்­டணி. தமி­ழ­ர­சுக்­கட்சி போலவே அதுவும் ஒரு கட்சி. அக்­கட்­சியின் செய­லா­ளர்தான் வீ.ஆனந்­த­சங்­கரி. அப்­ப­டிப்­பட்ட நிலையில் இன்­னு­மொரு கட்­சியின் பெய­ரிலும் சின்­னத்­திலும் போட்­டி­யி­டு­வது என்­பது கூட்­ட­மைப்பில் இருக்­கக்­கூ­டிய பிரச்­சி­னையை இங்கும் உரு­வாக்கும்.

 

நாங்கள் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பெய­ரிலும் சின்­னத்­திலும் போட்­டி­போ­டு­வதை காலம் தாம­திக்­கப்­பட்ட நிலையில் கருத்து முரண்­பா­டு­களின் அடிப்­ப­டையில் பிரிந்து செல்­வ­தென்று நாங்கள் பார்க்­க­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வோடும் மேற்­கு­லக நாடு­க­ளி­னு­டைய நிகழ்ச்சி நிரலில் இயங்கிக் கொண்­டி­ருப்­ப­தாக நாங்கள் பல தடவை பகி­ரங்­க­மாகக் குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கின்றோம். 

அந்த நிகழ்ச்சி நிரல் தொடர்­பாக தமிழ் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி கூட்­ட­மைப்­பி­னு­டைய அர­சியல் பாதை தமிழ்த் தேசிய அர­சி­ய­லுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கின்ற தமிழ்த் தேசத்­தி­னு­டைய இருப்பை இல்­லாமல் செய்­கின்ற அள­விற்கு அவர்கள் விலை போயி­ருக்­கி­றார்கள் என்ற தெளி­வான செய்­தியை 2009 இற்குப் பிற்­பாடு  தெளி­வாகக் கூறி வரு­கின்றோம். அக் கருத்­துக்கள் படிப்­ப­டி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு தமிழ் மக்கள் பேரவை மட்­டு­மன்றி வட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட பலர் அக் கருத்தை முற்­று­மு­ழு­தாக விளங்கிக் கொண்டு அந்த கூட்டை அம்­ப­லப்­ப­டுத்­து­கின்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. 

அந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு எதி­ராக கொள்கை ரீதி­யாக எதி­ரான கருத்து மிகப் பெரி­தாக வளர்ந்­தி­ருக்­கி­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் பாது­காப்பு இல்­லாது தமது சொந்த மக்­களை சந்­திக்க முடி­யா­துள்­ளது. அப்­ப­டிப்­பட்ட நிலையில் ஒரு மாற்­றுத்­த­லைமை என்­பது ஒரு புதிய நேர்­மை­யான கொள்­கை­யுடன் உறு­தி­யாக இருக்­கக்­கூ­டிய புதிய கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஒரு அணி­யாக இருக்க வேண்டும். நாங்கள் அத்­த­கைய தலை­மையை கட்­டி­யெ­ழுப்பிக் கொண்டு வரு­கின்றோம்.  அதன் விளை­வா­கத்தான் எழுக தமி­ழுக்கு ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்­து­கொண்­டார்கள். 

அப்­ப­டிப்­பட்ட நேர்­மை­யான கொள்­கையில் உறு­தி­யான விட்­டுக்­கொ­டுப்­பின்றி செயற்­படத் தயா­ராக இருக்­கின்ற கூட்டு, மாற்றுத் தலை­மை­யாக உரு­வா­கக்­கூ­டாது என்ற தேவை இலங்கை அர­சாங்­கத்­திற்கு மட்­டு­மன்றி பல வல்­ல­ரசு நாடு­க­ளுக்கும் இருக்­கின்­றது. 

எவ்­வ­ளவு தூரம் தங்­க­ளு­டைய நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடாக நகர்த்தி அந்த நிகழ்ச்சி நிரல் அம்­ப­ல­மாகி தமிழ்­மக்கள் அந்த நிகழ்ச்சி நிர­லுக்கு எதி­ராக கிளம்­பி­யுள்ள நிலையில், மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்­க­வேண்டும் கொள்­கையில் உறு­தி­யாக இருக்­கக்­கூ­டிய அர­சி­யலில் நேர்­மை­யாக இருக்­கக்­கூ­டிய தமிழ் மக்­க­ளு­டைய நலனை மட்டும் கவ­னிக்­கின்ற தரப்­பிற்கு மாற்று அணியில் பிடி வைத்­தி­ருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவும் ஆரோக்­கி­ய­மான நேர்­மை­யான கொள்­கையில் இணக்­கப்­பா­டு­டைய ஒரு தூய்­மை­யான மாற்று அணி உரு­வா­கு­வதைத் தவிர்ப்­ப­தற்­கா­க­வுமே இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. துர­திஸ்­ட­வ­ச­மாக சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை ஏமாற்றி அத்­த­கைய முயற்­சிக்கு அவரை துணை­போக வைத்­தி­ருக்­கி­றார்கள் என்­பது எங்களுடைய பார்வையாகும்.

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் நாங்கள் மதிப்பு வைத்திருக்கின்றோம். அத்தகைய மதிப்பு இல்லாவிட்டால் அவர்களுடன் கூட்டுச் சேருவதற்கு இணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருந்தோம். 

எங்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்கள் முக்கியமில்லை. தற்போது ஈ.பி.ஆர்.எல்.எப் அணி தமிழ் மக்கள் பேரவைக்கு வந்தபிற்பாடு கொள்கை ரீதியாக சரியான நிலைமை ஒன்றை எடுத்துள்ள நிலையில் அவர்களுடன் சொந்தம் கொண்டாட எந்தவிதமான கூச்சமும் கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட கொள்கையில் ஒன்றாக இணைந்து செயற்படக்கூடிய தரப்புக்களுடன் கூட்டணி உருவாக்காமல் எமது கொள்கைகள் அனைத்தையும் நிராகரிக்கின்ற ஒரு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் இணைந்துள்ளமையானது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. எம்மைப் பொறுத்தவரையில் சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி தமிழ்த் தேசிய விரோதிகள்  இந்தக் காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள் என்றே கருதுகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32