கண்டி வீதியின் களனி - கிரிபத்கொடை நகரங்களுக்கிடையிலான பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. இதனாலேயே மேற்படி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.