கடற்படை ட்ரக் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிள் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் வாத்துவ, 33ஆவது தூண் பகுதியில் இன்று இடம்பெற்றது.

வெலிசரை கடற்படை முகாமுக்குச் சொந்தமான இந்த ட்ரக் பாணதுறையில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 

அப்போது, அதே திசையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கடற்படையின் ட்ரக் எதிர்பாராதவிதமாக மோதியது.

மோதிய வேகத்தில் நிலைகுலைந்த சாரதி வீதியில் விழுந்தார். கண நேரத்தில் கடற்படையின் ட்ரக் மோட்டார் சைக்கிள் சாரதி மீது ஏறி இறங்கியது. இதில், சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

உயிரிழந்தவர் கல்பாத்த பகுதியைச் சேர்ந்த 42 வயது குடும்பஸ்தர் என்று தெரியவந்துள்ளது. ட்ரக்கை ஓட்டிச் சென்ற கடற்படை சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.