ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜகன பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்த பிரச்சினையை சீர் செய்வதற்காக அமைச்சர் நிமல் சிரி பா டி சில்வா தொழிற்சங்கங்களுடன் இன்று நண்பகல் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளமையினால் பணிப்புக்கணிப்பினை முன்னெடுத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வேலைநிறுத்தம் காரணமாக பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க இலங்கை போக்குவரத்துச் சபை விஷேட பஸ்கள் சேவைகளை மேற்கொண்டுள்ளன. 

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளமையே இதற்குக் காரணம் என, ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.