பங்களாதேஷ் நாட்டின் கடற்படை கப்பலான  “பிஜோய்” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது.

நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பங்களாதேஷ் கடற்படைக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதையுடன் வரவேற்றனர்.

இதன்போது, இலங்கையிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கமடோர் செய்ட் மக்சுமல் ஹக்கீம் கலந்துகொண்டார்.

பங்களாதேஷ் கடற்படையினர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள பங்களாதேஷ் கடற்படைக் கப்பலானது நாளை நாளை நாட்டை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.