பாடசாலை ஒன்றின் அருகே நீதிமன்றம் ஒன்று தாபிக்கப்படுவதை எதிர்த்து இன்று காலை மாத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

விஜய வித்தியாலய என்ற பாடசாலைக்கு அருகாமையில் புதிய நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் கடந்த வாரம் நாட்டப்பட்டது.

பாடசாலைக்கு அருகாமையில் பாதுகாப்புகள் நிறைந்த நீதிமன்றம் அமைக்கப்படுவதால், பாடசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பாடசாலையின் முன்னாள் மாணவர்களும் பெற்றோரும் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.