6வது இருபதுக்கு 20  உலகக் கிண்ணத் தொடருக்கான பங்களாதேஷ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இருபதுக்கு 20  உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பங்களாதேஷ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அணி விவரம்:

மோர்டஸா(அணித்தலைவர்), ஷாகிப் அல்-ஹசன், தமிம் இக்பால், முகமது மிதுன், முஹ்மதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், ஷபீர் ரகுமான், நஷீர் ஹொசைன், முஸ்டாபிஜூர் ரகுமான், அல்-அமீன் ஹொசைன், தஸ்கின் அகமது, அரபாத் ஷன்னி, அபு ஹைதர், நுருல் ஹசன்.