இந்தியாவின் உத்தாரகண்ட் மாநிலம் மற்றும் புது டில்லி நகரில் நேற்று இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்றைய நிலநடுக்க செய்தியையடுத்து இலங்கையின் சில கரையோர பிரதேசங்களிலுள்ள மக்கள் பீதியடைந்தனர். 

இதேவேளை டில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள இலங்கையர் எவருக்கும் பாதிப்பேற்பட்டதா என்பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கூடிய கவனம் செலுத்திவருகின்றது. 

இது தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் நேற்று இரவு 5.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இலங்கைக்கு அதனால் எவ்வித அழுத்தங்களுமில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.