படவாய்ப்பேயில்லாமல் இருந்த முன்னணி நடிகை ஹன்சிகாவிற்கு நடிகர் அதர்வா பட வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

பிரபுதேவாவுடன் இணைந்து குலேபகாவலி என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார் நடிகை ஹன்சிகா மொத்வானி. வேறு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சம்பளம் மற்றும் புதுமுக நடிகர்கள் என்பதால் தவிர்த்து வந்தார். அத்துடன் தன்னுடைய உடல் எடையையும் குறைத்து, தன்னுடைய தோற்றத்தையும் மேலும் பொலிவாக்கி கொண்டிருக்கிறார். இதைக் கண்ட டார்லிங் பட இயக்குநர் சாம் அண்டன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

அதர்வா முன்னணி நடிகர் என்பதாலும், சாம் அண்டன் ஏற்கனவே வெற்றிப்படங்களை இயக்கியிருப்பதாலும், சம்பளம் நினைத்தப்படி கிடைத்ததாலும் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை ஹன்சிகா. இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சென்னையில் தொடங்கவிருப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்