யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே  மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து சாவகச்சேரி – மீசாலை ஏ-9 வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் சாவகச்சேரி வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 62 வயதுடைய சந்திரபாலன் பரமேஸ்வரி என்பவரே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன்  67 வயதுடைய சின்னையா சந்திரபாலன் என்பவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவனும் மனைவியும் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.