யானைத் தந்தங்களை அனுமதியின்றி வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்த நிக்கவரெட்டிய புலனாய்வுப் பொலிஸார், அவர்களிடமிருந்து யானைத் தந்தங்களின் ஏழு பாகங்களைக் கைப்பற்றினர்.

மீகலேவ மற்றும் கிரிபாவ பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கல்கமுவை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.