இந்திய ட்ரோன் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இத்தகவலை, அந்நாட்டு அரச  ஊடக நிறுவனமான ஸிங்ஹுவா வெளியிட்டுள்ளது.

“இந்தியாவின் இந்த நடவடிக்கை எமது பிராந்திய இறையாண்மையை மீறும் செயல். இதையிட்டு நாம் அதிருப்தியடைந்துள்ளதுடன் எமது எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்” என இராணுவ உயரதிகாரி ஸேங் ஷூலி தெரிவித்திருப்பதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மேற்படி சம்பவம் எப்போது, எங்கே நிகழ்ந்தது என்பது குறித்து சீனா தெரிவிக்கவில்லை.