மன்னார் பிரதான பாலத்தில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரிப்பு 

Published By: Priyatharshan

07 Dec, 2017 | 10:06 AM
image

மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விவசாய செய்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள கல் நடைகளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு மற்றும் அதனை அண்டிய இடங்களில் உள்ள மேச்சல் தரைகளுக்கு கால்நடை வளர்ப்பாளர்களினால் அனுப்பப்பட்ட நிலையில், விவசாயிகளின் விவசாயச் செய்கைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் தீவுக்கு வெளியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களின் மடுகள் மற்றும் எருமை மாடுகள் அதிகளவில் கூட்டம் கூட்டமாக மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னாரினுள் வருகின்றது.

இரவு பகல் பாராது தொடர்ச்சியாக மன்னார் பிரதான பாலத்தில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்தமையினால் விபத்துக்கள் ஏற்படுவதோடு, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மன்னார் பிரதான பாலத்தில் கால் நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30