மராட்­டியம், லட்­சத்­தீவில் கரை ஒதுங்­கிய 1074 தமி­ழக  மீன­வர்கள் ஊர் திரும்ப வழி­யின்றி தவிப்­ப­தா­கவும், உணவு, குடி­நீ­ருக்கு கூட வழி­யில்லை என்றும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்­பி­யுள்­ளனர்.

குமரி மாவட்­டத்தை கடந்த மாதம் 30ஆம் திகதி ஒக்கி புயல் புரட்டிப்போட்­டது. புயல் தாக்­கி­ய­போது கட­லுக்கு சென்ற குமரி மீன­வர்­களின் பட­குகள் அலையில் இழுத்துச் செல்­லப்­பட்­டது. சுமார் 300க்கும் மேற்­பட்ட பட­குகள் மாய­மா­னது. அதில் இருந்த மீன­வர்­களும் காணாமல் போனார்கள்.  புயல் ஓய்ந்து கடல் அமைதி அடைந்­த­போது மாய­மான மீன­வர்­களை தேடும் பணி தொடங்­கி­யது. இந்­திய கடற்­படை, கட­லோர காவல் படை வீரர்கள் மீட்பு படகு, ஹெலி­கொப்டர், இரா­ணுவ விமா­னங்கள் மூலம்­தே­டுதல் வேட்­டையில் ஈடு­பட்­டனர்.

இதில் நடுக்­க­டலில் தத்­த­ளித்த மீன­வர்கள்  உயி­ரு­டனும்  சட­லங்­க­ளா­கவும்  மீட்­கப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து குமரி மாவட்­டத்தில் மாய­மான மீன­வர்கள், அவர்­களின் பட­குகள் பற்­றிய விப­ரங்­களை அரசு வெளி­யிட்­டது. இதில் 70 மீன­வர்கள் மட்­டுமே மாய­மாகி இருப்­ப­தா­கவும், அவர்­களை மீட்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தது.

இந்த புள்ளி விப­ரத்தை மீனவ அமைப்­புகள் மறுத்­தன. குமரி மாவட்­டத்தில் இருந்து சுமார் 2 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மீன­வர்­களும், அவர்­களின் 254 பட­கு­களும் மாய­மாகி இருப்­ப­தாக தெரி­வித்­தனர்.

அரசு புள்ளி விவ­ரமும், மீன­வர்­களின் தக­வலும், முன்­னுக்குப் பின் முர­ணாக இருந்­தது. இதனால் மாய­மான மீன­வர்கள் எத்­தனை பேர் என்­பதை துல்­லி­ய­மாக கணக்­கெ­டுக்க அரசு புதிய ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டது.

அதன்­படி, குமரி மாவட்­டத்தில் உள்ள 44 மீனவ கிரா­மங்­க­ளிலும் மாய­மான மீன­வர்கள் குறித்த கணக்­கெ­டுப்பு தொடங்­கி­யது. இதில் மூத்த ஐ.ஏ.எஸ். அதி­கா­ரிகள் ஈடு­பட்­டனர். அவர்கள் இது­வரை 33 மீனவ கிரா­மங்­களில் கணக்­கெ­டுப்பை நடத்தி உள்­ளனர். இன்னும் 11 கிரா­மங்­களில் கணக்­கெ­டுப்பு நடந்து வரு­கி­றது.

44 கிரா­மங்­க­ளிலும் தகவல் சேக­ரிப்பு முடிந்த பின்பு மாய­மான மீன­வர்கள், அதில் மீட்­கப்­பட்­ட­வர்கள் பற்­றிய முழு விப­ரங்கள் தெரிய வரும். இதற்­கி­டையே குமரி மாவட்­டத்தில் இருந்து கட­லுக்கு சென்ற நூற்­றுக்­க­ணக்­கான மீன­வர்கள் பட­கு­க­ளுடன் மராட்­டியம், கோவா, கர்­நா­டகா, குஜராத் மாநில கடற்­க­ரை­களில் கரையொதுங்கி வரு­கி­றார்கள்.

அலை­களால் துரத்­தப்­பட்டு காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்­லப்­பட்ட இவர்­களில் பலர் லட்­சத்­தீவின் ஆளில்லா தீவு­க­ளிலும் தஞ்சம் அடைந்­துள்­ளனர். கட­லுக்குள் ஒரு வார­மாக தத்­த­ளித்­ததால் இவர்­களின் தகவல் தொடர்பு சாத­னங்கள் செய­லி­ழந்துள்ளன.

கரை ஒதுங்­கிய பின்­னரே அந்­தந்த மாநில மீனவ அமைப்­புகள் மூலம் குமரி மாவட்ட மீனவ அமைப்­பு­களை தொடர்பு கொண்டு கரை ஒதுங்­கிய விப­ரங்­களை தெரி­வித்து வரு­கி­றார்கள்.

இப்­படி வெளி மாநி­லங்­களில் இது­வரை 126 பட­கு­களும், அதில் இருந்த 1074 மீன­வர்­களும் தஞ்சம் அடைந்த தகவல் இப்­போது தெரிய வந்­துள்­ளது. இவர்­களில் மராட்­டிய மாநிலம் ரத்­தி­ன­கிரி துறை­மு­கத்தில் தஞ்சம் புகுந்­த­வர்கள் குமரி மாவட்­டத்தில் உள்ள மீனவ அமைப்­பு­க­ளுக்கும், அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கும் கரை திரும்­பிய தக­வலை தெரி­வித்­துள்­ளனர்.

உயிர் பிழைத்­தாலும், இப்­போது ஊர் திரும்ப வழி­யின்றி தவிப்­ப­தா­கவும், உணவு, குடி­நீ­ருக்கு கூட வழி­யில்லை என்றும் அவர்கள் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்­ளனர்.

வெளி­மா­நி­லங்­களில் சிக்கி தவிக்கும் குமரி மீன­வர்­களை தமி­ழக அரசு மீட்டு வர வேண்­டு­மென்று குமரி மாவட்ட மீனவ அமைப்­புகள் கோரிக்கை விடுத்­துள் ­ளன.