வாக்­கு­க­ளுக்­காக கழ­கங்­களை பயன்­ப­டுத்­து­கி­றார்கள். அதனால் அவர்கள் சொல்­வதை நிர்­வாக சபை­யினர் கேட்டு நடக்­க­வேண்­டிய கட்­டா­யத்­திற்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர். இதனைத் தடுக்க தற்­போ­துள்ள 140 கழக வாக்­கு­களை 75ஆக குறைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளேன்.

அப்­படி என்னால் குறைக்க முடி­யா­விட்டால் நான் தற்­போ­துள்ள இலங்கைக் கிரிக்கெட் நிரு­வா­கத்தை கலைத்­து­வி­டுவேன் என்று அதி­ர­டி­யாக அறி­வித்­துள்ளார் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர.

இலங்கைக் கிரிக்­கெட்டை சீர­ழித்­து­விட்ட திலங்க சும­தி­பால தலை­மை­யி­லான கிரிக்கெட் நிர்­வா­கத்தை இதற்­கு­மேலும் விட்­டு­வைக்கப் போகி­றீர்­களா என்று அமைச்­ச­ரிடம் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இது­கு­றித்து அமைச்சர் மேலும் பேசு­கையில்,

கடந்த 8 வரு­டங்­க­ளாக நடை­பெற்­று­வந்த இடைக்­கால நிர்­வாக சபையை நீக்­கி­விட்டு ஜன­நா­யக ரீதி­யாக தேர்தல் மூலம் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள்தான் தற்­போ­துள்ள நிர்­வாக சபை­யினர். அதனால் ஜன­நா­ய­கத்தின் மீது அதி­காரம் செலுத்த நான் விரும்­ப­வில்லை.

கிரிக்கெட் நிர்­வா­கத்தை தேர்ந்­தெ­டுக்கும் தேர்­தலில் மொத்தம் 140 வாக்­குகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இதனை 70ஆக குறைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளேன்.

அப்­படி என்னால் முடி­யா­விட்டால் நான் நிச்­ச­ய­மாக தற்­போ­துள்ள கிரிக்கெட் நிர்­வா­கத்தை கலைத்து இடைக்­கால நிர்­வாக சபையை அமைப்பேன்.

அணியின் வீழ்ச்சி குறித்து நான் மிகவும் கவனம் செலுத்தி வரு­கிறேன். சங்­கக்­கா­ரவும், மஹே­லவும் இருந்­த­கா­லத்தில் ஒருவர் இல்­லை­யென்றால் மற்­றொ­ருவர் அந்த இடத்தை நிரப்பி வந்­தனர். 8 வரு­டங்­க­ளாக அவர்கள் இதனை சரி­யாக செய்­தனர்.

தற்­போது அப்­படி ஆடக்­கூ­டிய வீரர்கள் அணியில் இல்லை. குறிப்­பாக சுழற்­பந்து வீச்சை எதிர்­கொள்­ளக்­கூ­டிய வீரர்கள் எமது அணியில் இல்லை.

இந்­தியா சென்ற வீரர்­களை திருப்பி அழைத்­தமை குறித்து?

உண்­மைதான். விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரின் அனு­ம­தி­யில்­லாமல் எந்த வீரரும் தேசிய மட்டப் போட்­டி­களில் கலந்­து­கொள்ள முடி­யாது.

குறைந்­தது மூன்று வாரங்­க­ளுக்கு முன்னர் அணித் தேர்வை நடத்தி எனக்கு வீரர்­களின் விப­ரங்­களை தர­வேண்டும். ஆனால் இவர்கள் கடைசி நேரத்தில் அனு­ம­திக்­காக அனுப்­பி­யி­ருந்தனர். அதற்குள் வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதனால்தான் அவர்களை திரும்பி வருமாறு அழைத்தேன். இதன் காரணமாக விமானம் நேரம் தாழ்த்தி பயண மாகியுள்ளது. அந்த நஷ்டத்தை குறித்த அதிகாரி செலுத்த வேண்டும் என்றார்.