துறை­முக அதி­கார சபையும்  சீன நிறு­வ­னமும்  அம்பாந்­தோட்டை துறை­முகம்  தொடர்பில் செய்­து­கொண்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம்   உரு­வாக்­கப்­பட்ட  இர ண்டு  நிறு­வ­னங்­களும்   தமது செயற்­பா­டு­களை  9 ஆம் திகதி முதல் ஆரம்­பிக்­க­வுள்­ளன என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர்  கயந்த கரு­ணா­தி­லக்க  தெரி­வித்தார்.   அர­சாங்க

தகவல் திணைக்­க­ளத்தில்  நேற்று நடை­பெற்ற   வாராந்த அமைச்­ச­ரவை  முடி­வு­களை   அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­வித்­த­போதே   அவர்  மேற்­கண்­ட­வாறு குறிப்பிட் டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

அரச – தனியார் இணை வேலைத்­திட்­டத்தின் கீழ் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் செயற்­பாட்டு நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்தி அதனை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான இணை ஒப்­பந்தம் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கைச்­சாத்­தி­டப்­பட்­டது. 

அத­ன­டிப்­ப­டையில்,    அம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்தின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்காக ஸ்தாபிக்­கப்­பட்ட விசேட பணி­களை மேற்­கொள் ளும் இரு நிறு­வ­னங்­களும் தமது செயற்­பாட்­டினை 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி முதல் ஆரம்­பிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளன. 

 அத­ன­டிப்­ப­டையில் பங்கு உரிமை தொடர்பில் உரிய தரப்­பி­ன­ருடன் ஒப்­பந்தம் ஒன்றில் கைச்­சாத்­தி­டு­வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர்  மஹிந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோச னைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.