கலப்புத் தேர்தல் முறையை இல்­லாது செய்தல்,  புதிய அர­சி­ய­ல­மைப்பு யோச­னையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள வடக்கு கிழக்கு இணைப்பை தவிர்த்தல், புதிய அர­சி­ய­ல­மைப்பு யோச­னையை இடைக்­கால அறிக்­கை­யுடன் கைவிடல் போன்ற கோரிக்­கை­களை ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாஅத்  அர­சாங்­கத்­திடம் முன்­வைக்­கி­றது. எனவே அது தொடர்பில் அர­சாங்கம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 31 ஆம் திக­திக்குள் உறு­தி­யான தீர்­மானம் ஒன்றை தெரி­விக்க வேண்டும். அல்­லாது போனால் முஸ்­லிம்­களை வீதிக்­கி­றக்கி போராட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அவ்­வ­மைப்பின் தலைவர் ரஸ்மின் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­யளார் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள அவ்­வ­மைப்பின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

கலப்புத் தேர்தல் முறை மூலம் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­துவம் வெகு­வாகப் பாதிக்­கப்­ப­ட­வுள்­ளது. மேலும் குறித்த சட்­ட­மூலம் சட்­டத்­திற்கு முர­ணான வகையில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் முஸ்லிம் சமு­கத்தின் பிர­தி­நி­தித்­துவம் வெகு­வாகக் குறை­வ­டை­ய­வுள்­ளது. எனவே சிறு­பான்­மை­யி­னரின் வாக்கு பலத்தால் உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம் தற்­போது அம்­மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்குப் புறம்­பாகச் செயற்­ப­டு­கி­றது.

மேலும் அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்­பையும் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிக்­கி­றது.   தற்­போது நடை­ய­மு­றை­யி­லுள்ள அர­சியல் அமைப்­பா­னது சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை ஓர­ளவு பாது­காக்­கின்ற அர­சி­ய­ல­மைப்­பாக உள்­ளது. ஆயினும் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் ஏற்­க­னவே உள்ள சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­க­ளையும் தாரை­வார்க்­கின்ற அர­சி­ய­ல­மைப்­பாக அமை­ய­வுள்­ளது.

அவ்­வ­ர­சி­ய­ல­மைப்மை கொண்டு வரு­மாறு மக்கள் அர­சாங்­கத்தைக் கோர­வில்லை. அர­சாங்கம் சர்­வ­தே­சத்தின் தேவை­க­ளுக்­கா­கவே இவ் வர­சி­ய­ல­மைப்பைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு எதிர்­பார்க்­கி­றது. மேலும் அதன் மூலம் வடக்கு கிழக்கை மீண்டும் இணைக்கும் ஏற்­பா­டு­களும் உள்­ளன. அதனை முஸ்­லிம்கள் தரப்பில் ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது.

வடக்கில் தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக உள்­ளனர். இதே­வேளை கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்கள் 40 சத­வீதம் வாழ்­கின்­றனர். எனவே மீண்டும் வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டால் முஸ்­லிம்கள் 17 சத­வீ­த­மாக பலம் இழந்து விடுவர்.  ஆகவே அப்­போது முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் வெகு­வாக்க குறை­வ­டைந்து விடும். இணைந்த வட கிழக்கில் முஸ்­லிம்­களின் உரி­மைகள் பாது­காக்­கப்­படும் எனக் கருத முடி­யாது.

ஏனெனில் வடக்கு கிழக்கு பிரிந்­தி­ருக்­கின்ற தற்­போ­தைய சூழ­லி­லேயே வடக்கு மாகாண சபையின் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், இலங்கை முஸ்­லிம்கள் வெளி­நா­டு­களைச் சேர்ந்­த­வ­தர்கள் எனக் குறிப்­பிட்­டுள்ளார். அவ்­வா­றான நிலை­பாட்டில் இருக்­கும்­போது வடக்கு கிழக்கை இணைத்தால் முஸ்­லிம்­க­ளுக்­கான நியாயம் கிடைக்­கப்­போ­வ­தில்லை.

மேலும்  வில்­பத்து விவ­காரம் இடம்­பெற்று வரு­கி­றது. எனினும் அவ்­வி­ட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­னின்று செயற்­ப­ட­வில்லை. அத்­துடன் வடக்கில் மீள்­கு­டி­யேற்றம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. எனினும் அங்கு முஸ்­லிம்கள் மூள்­கு­டி­யே­று­கின்ற சந்­தர்ப்­பங்­களில் தமிழ் தரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதற்கு எதி­ரான கருத்­து­க­ளையே தெரி­விக்­கின்­றனர். 

எனவே புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டு­களை  இடைக்­கால அறிக்­கை­யுடன் தள்­ளு­படி செய்­யப்­பட வேண்டும். அத்­துடன் கலப்புத்  தேர்தல் முறை­யி­னையும் தடை­செய்ய வேண்டும். இது தொடர்பில் நாட்டின் பல பாகங்­க­ளிலும் மக்கள் மத்­தியில் கூட்­டங்­களை நடத்­தி­யுள்ளோம். 

 இவ்­வி­வ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறு கேட்­டு­க­கொண்டோம். எனினும் எமக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை.

 கலப்புத் தேரர்தல் முறையை இல்லாது செய்தல், வடக்கு கிழக்கு இணைப்பை தவிர்த்தல், புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படுவதைத் தடுத்தல் போன்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைக்கிறோம். அது தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் அரசாங்கம் தீர்வு முன்வைக்க வேண்டும். அல்லாது போனால் முஸ்லிம்களை வீதிக்கிறக்கி போராடுவதற்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.