82க்கும் 25க்கும் காதல் : எதிர்ப்பையும் தாண்டி நடந்து முடிந்த திருமணம்

Published By: Digital Desk 7

06 Dec, 2017 | 05:33 PM
image

மலாவி நாட்டில் தயோலோ நகரில் 25 வயதான பெண்ணை 82 வயதான முதியவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலாவியின் தயோலோ நகரை சேர்ந்த 82 வயதான ரியூபின்சன் சிந்துலி  பொலிஸ் அதிகாரியாக வேலை செய்து கடந்த 1970ஆம் ஆண்டு  ஓய்வு பெற்றுள்ளார்.

சிந்துலி டோவா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது.

பின்னர் முதல் மனைவி இறந்துவிட இரண்டாவதாக ஒரு பெண்ணை சிந்துலி திருமணம் செய்து அவரை பிரிந்துவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

சிந்துலி வீட்டுக்கு 25 வயதான ஜியோன் குவடானி என்ற திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான இளம் பெண் வீட்டு வேலைக்கு வந்துள்ளார்.

இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி பின்னர் காதலிக்க தொடங்கியுள்ளனர். பேத்தி வயது பெண்ணை சிந்துலி காதலிப்பதற்கு ஊர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஜியோன் வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவரை தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்ய சிந்துலி முடிவெடுத்தார்.

ஆனால் இதற்கு தேவாலய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து சிந்துலி கூறுகையில்,

"சட்டபூர்வமாக இருவரும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு பல தடைகள் வந்தபோதும் அதை எதிர்த்து இணைந்துள்ளோம். அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஜியோன் உள்ளார்" என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52