இரத்தினபுரியில், உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இரத்தினபுரியின் பல்லேபெத்த, தம்பேதென்ன பகுதியில் உள்ள கறுவாத் தோட்டத்தில் உள்ள குடிசை ஒன்றில் இருந்தே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் அஹுங்கல்ல, வனகல்வெஹெர பகுதியைச் சேர்ந்த லக்மால் ரணதுங்க (36) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இவரது சடலம், நாளை (7) உடற்கூற்றியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுபவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.