புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து உதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர். 

மேலும், இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் என்பவற்றோடு, பொது அமைப்புகளும் இணைந்துள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள பொது அணியின்கொள்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதேவேளை, கூட்டணிக்கான பெயர் எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.