தொடர்பைக் கைவிட மறுத்த கணவரின் ஆணுறுப்பில் மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் மதுரையில் இடம்பெற்றுள்ளது.

முப்பது வயது நிறைந்த சசிகலா என்ற பெண்ணே தன் கணவருக்கு இத்தகைய கடுமையான தண்டனையைத் தந்தவர்.

சசிகலாவின் கணவர் அவருக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார். எப்படியோ இது சசிகலாவுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து அந்த உறவைக் கைவிடுமாறு தன் கணவருடன் சண்டை பிடித்துள்ளார் சசிகலா. ஆனால் அவரது கணவர் நாளடைவில் சசிகலாவை விட்டுவிட்டு, தனது புதுக் காதலியுடனேயே தங்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில், தனது கணவருடன் சமரசத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவது போல் சசிகலா நடித்துள்ளார். அதை நம்பி வீடு திரும்பிய அவரது கணவர் உறங்கிக்கொண்டிருந்தபோதே எண்ணெய்யைக் கொதிக்க வைத்து அவரது மர்ம உறுப்பில் ஊற்றியிருக்கிறார்.

இதனால் கடும் காயங்களுக்கு உள்ளான அவரது கணவரை, அக்கம்பக்கத்தார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவத்தையடுத்து சசிகலா மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.