தேர்தலுக்கு முன்பே வெளிவரலாம் என்று நினைத்த ‘தெறி’ படத்தை, தேர்தலுக்கு பிறகு வெளியிடலாமா? என்ற எண்ணம் ஓடுகிறதாம் தயாரிப்பாளர் தானுவுக்கு.

எது எப்படியிருந்தாலும் கடந்த காலத்தில் பட்ட அவஸ்தைகளை இந்த முறை பட வேண்டாம் என்று நினைத்திருக்கும் விஜய், “இந்த தேர்தலில் நம்ம ஆதரவு யாருக்கும் இல்லை” என்று சைலண்டாக சர்குலர் அனுப்ப முடிவெடுத்திருக்கிறாராம். நரி வந்தாலும் ஊளை. ஆந்தை வந்தாலும் அலறல் என இருந்த ஒரு மனுஷன் என்னதான் பண்ண முடியும்?