கல்வித் பொதுத்தராதர சாதாரணதர தரப் பரீட்சை நெருங்குவதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள், மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், விநியோகித்தல், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் மூலம் விளம்பரப்படுத்துதல் என்பன முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன.

விதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தடை, பரீட்சைகள் நிறைவு பெறும் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

யாராளவது தனி நபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தடையுத்தரவை மீறி செயற்பட்டால் அவர்கள் பரீட்சை சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார். 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறிந்தால் பொலிஸ் அவசர எண் 119 அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் தொடர்பு எண் 1911 என்ற இலக்கத்திற்கோ தகவல் வழங்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார். 

கல்வித் பொதுத்தராதர சாதாரணதர தரப் பரீட்சைகள் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.