பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு சீருடை வழங்­கு­வ­தற்கு பதி­லாக பண வவுச்சர் வழங்­கு­வ­தற்கு கல்வி அமைச்சு எடுத்­துள்ள தீர்­மானம் எதிர்­கா­லத்தில் சீருடை வழங்­கு­வதை நிறுத்தும் திட்­ட­மா­கு­மென இலங்கை ஆசி­ரியர் சேவை சங்கம் தெரி­வித்­துள்­ளது.

 

Unifome

இது தொடர்­பாக இலங்கை ஆசி­ரியர் சேவை சங்­கத்தின் செய­லாளர் மஹிந்த ஜய­சிங்க விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு சீருடை வழங்­கு­வ­தற்கு பதி­லாக பண வவுச்சர் வழங்­கு­வ­தற்கு கல்வி அமைச்சு எடுத்­துள்ள தீர்­மானம் முறை­யான திட்­ட­மொன்றை அமைப்­ப­தற்கு கல்வி அமைச்­சினால் முடி­யாமல் போயுள்­ளது என்­பதை எடுத்­துக்­காட்­டு­வ­துடன் மாண­வர்­க­ளுக்கு சீரு­டை­வ­ழங்கும் பொறுப்­பி­லி­ருந்து வில­கிக்­கொள்ளும் முயற்­சி­யா­கவும் இருக்­கின்­றது.

கல்வி அமைச்சின் இந்த தீர்­மா­னத்தின் பின்­ன­ணியில் எதிர்­கா­லத்தில் மாண­வர்­க­ளுக்கு சீரு­டை­வ­ழங்­கு­வதை முற்­றாக நிறுத்­து­வ­தற்­கான திட்­ட­மொன்று இருப்­ப­தா­கவே நாங்கள் சந்­தே­கிக்­கின்றோம். இதற்கு முன்னர் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட இல­வச மதிய உணவு திட்­டமும் இவ்­வாறே பல முறை­மை­க­ளுக்கு மாற்­றப்­பட்டு இறு­தியில் அதனை முற்­றாக நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

கல்­வி­அ­மைச்சு வழங்கும் பண வவுச்சர் மூலம் மாண­வர்­க­ளுக்கு போது­மா­ன­ளவு தர­மான அளவு சீரு­டையை பெற்­றுக்­கொள்­ளலாம் என்­ப­தற்கு என்ன உத்­த­ரவாதம் இருக்­கின்­றது? இதன்­கா­ர­ண­மாக பண வவுச்­சரின் பெறு­மதி,சீரு­டையின் தரம் மற்றும் தேவை­யான அளவு போன்ற விட­யங்­களை கருத்திற் கொண்டு மாண­வர்­களும் பெற்­றோர்­களும் திறந்த சந்­தை­களில் அலைந்து திரி­ய­வேண்­டிய நிலையும் ஏற்­படும்.

அத்­துடன் கல்வி அமைச்சு வெளி­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­க­ளுடன் மறை­மு­க­மாக செய்­து­கொண்ட ஒப்­பந்­த­மா­கவும் இது இருக்­கலாம் என்ற சந்­தே­கமும் எழு­கின்­றது. கடந்த காலங்­களில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு சீரு­டைத்­துணி வழங்கி உயர்தரத்தை ஏற்­ப­டுத்தி உள்ளூர் உற்பத்தியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

எனவே கல்வி அமைச்சின் இந்த தீர்மானத்தை எமது சங்கம் வன்மையாக எதிர்ப்பதுடன் மாணவர்களுக்கு தரமா