அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய தாக்கல் செய்த ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புரவெசி பலய அமைப்பால் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.