காலி கழுவெல்லை பிரதேசத்தில் இன்று காலை 9 மணியளவில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீபரவல் ஏற்பட்டுள்ளது.

காலி மாநாகரசபையின் தீயனைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

குறித்த தீப்பரவலில் ஆடை விற்பனைக் கடை முழுமையாக சேதமடைந்து உள்ளதாகவும் தீயினால் எற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.