'வொய்ஸ் ஒப் அமெ­ரிக்கா',  'ரேடியோ லிபேர்ட்டி'  உள்­ள­டங்­க­லாக 9  அமெ­ரிக்க ஊட­கங்­களை வெளி­நாட்டு உளவு முகவர் நிலை­யங்­க­ளாக ரஷ்யா  பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.

 வெளி­நாட்டு ஊட­கங்­களை வெளி­நாட்டு உளவு முகவர் நிலை­யங்­க­ளாக  பிர­க­ட­னப்­ப­டுத்­து­வதை சாத்­தி­ய­மாக்கும் சட்டம் கடந்த மாதம் ரஷ்ய பாரா­ளு­மன்­றத்­தி­னூ­டாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

 இதன் பிரகாரம் ஊடக நிறுவனங்கள் தமது நிதிக்கான மூலம் குறித்து  வெளிப்படுத்துவது அவசியமாகும்.

அமெரிக்க நீதித் திணைக்களம் அந்நாட்டில் செயற்படும் ரஷ்ய ஊடகங்க ளான ஆர்.ரி. மற்றும் ஸ்புட்னிக் என்பவற்றை வெளிநாட்டு உளவு முகவர் நிலையங்களாக பதிவு செய்திருந்தமைக்கு பதிலடி செயற்பாடாக மேற்படி நடவ டிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆர்.ரி. ஊடகம்  ரஷ்யா சார்பில்  செல்வாக்குச் செலுத்தியிருந்ததாக அமெரிக்க புல னாய்வு முகவர் நிலையங்கள் குற்றஞ் சாட்டுகின்றன.

இந்நிலையில் மேற்படி குற்றச்சாட்டுக்கு ரஷ்ய ஊடகங்கள் மறுப்புத் தெரிவித் துள்ளன.