பிரான்ஸ் கடற்­படைக் கப்­ப­லான ஒவகேன் நல்­லெண்ண அடிப்­ப­டையில் கொழும்பு துறை­முகம் வந்­துள்­ளது. கடற்­படை மர­பு­க­ளுக்கு இணங்க இக்­கப்பல் இலங்கை கடற்­ப­டையால் வர­வேற்­கப்­பட்­டது. 

இவ்­வ­ர­வேற்பின் போது கொழும்பு துறை­மு­கத்தில் இலங்­கைக்­கான பிரான்ஸ் தூதுவர் ஜூன் மாரின் ஆக்ரூம் ஏனைய பிரான்ஸ் தூத­ரக அதி­கா­ரி­களும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்­தனர். 

நான்கு நாட்கள் நல்­லெண்ண பய­ணத்தை ஆரம்­பித்த இக் கப்பல் இன்று இலங்­கை­யி­லி­ருந்து செல்­கி­றது. இவ் விஜ­யத்தின் போது இலங்கை கடற்­ப­டை­யுடன் பயிற்சி  நிகழ்­வு­க­ளிலும் பிரான்ஸ் கடற்­ப­டை­யினர் கலந்து கொண்­டனர். 

142 மீற்றர் நீளம்  20 மீற்றர்  அகலம்  600 தொன் எடை கொண்­டது ஒவகேன் பிரான்ஸ் கடற்படைக்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.