ரயில் சார­திகள் இன்று நள்­ளி­ரவு முதல் பணிப்பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­டு­வது தொடர்பில் கவனம் செலுத்தி வரு­கின்­றனர். ரயில் சாரதி உத­வி­யா­ளர்­களை இணைத்­துக்­கொள்ளும் விதி­மு­றை­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்தே குறித்த பணிப்பகிஷ்­க­ரிப்பு சம்­பந்­த­மாக கவனம் செலுத்­தி­யுள்­ளனர்.

எனினும் குறித்த விவ­காரம்  தொடர்பில் இன்றும் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­கி­றது.

அப்­பேச்­சு­வார்த்தை வெற்­றி­ய­ளிக்­கா­தவி­டத்து நள்­ளி­ரவு முதல் பணிப்பகிஷ்­க­ரிப்பில் ஈடு­­ப­டு­வ­தற்கு ரயில் சார­திகள் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

ரயில் சாரதி உத­வி­யா­ளர்­களை இணைத்­துக்­கொள்ளும் நடை­மு­றையில் உள்ள சிக்கல் குறித்து ஏற்­க­னவே சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது. 

எனினும் அப்­பேச்­சு­வார்த்­தையில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அத­னா­லேயே பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.