இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பத்தாம் திகதி முதல் பதினேழாம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், இலங்கை அணியை திசர பெரேரா தலைமை ஏற்று வழிநடத்தவுள்ளார்.

பங்குபற்றவுள்ள வீரர்கள்: உப்புல் தரங்க, தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்ன, எஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, சத்துரங்க டி சில்வா, அக்கில தனஞ்சய, சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த்த சமீர, சச்சித் பத்திரன மற்றும் குசல் ஜனித் பெரேரா.

இவ்வணி நேற்றே (4) இந்தியாவுக்குப் புறப்பட ஏற்பாடாகியிருந்தது. எனினும், நீண்ட விடுமுறை காரணமாக, அணியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் அமைச்சரிடம் உரிய அனுமதி பெறாத காரணத்தால் இன்று நள்ளிரவு 12.30 மணியளவிலேயே புறப்படவுள்ளது.