உலகத்திற்கான வைத்தியர்கள் எனும் பிராந்திய அமைப்பு இலங்கை உட்பட 44    நாடுகளில் இயங்கி வருகிறது. 

இவ்வமைப்பு இலங்கையில் 2005 ஆம் ஆண்டில் இருந்து   செயற்பட்டுவருகிறது. 

இவ்வமைப்பு 2015 இல் ஒரு மில்லியன் யூரோ நிதியை உள்ளடக்கிய திட்டத்தை இலங்கையில் ஆரம்பித்தது. 

இந்த நிதி இலங்கை மத்திய மாகாணத்தில் இயங்கிவரும் மனித அபிவிருத்தி அமைப்பு  மூலம் மலையக மக்களை சென்றடையவுள்ளது. 

உலகத்திற்கான வைத்தியர்கள் எனும் பிராந்திய அமைப்பு வடக்கிலும் தீவரமாக செயட்பட்டு வருகிறது.

 மனித அபிவிருத்தி அமைப்பின் 2003 இல் 265000 மலையக மக்களுக்கு இலங்கைக் குடியரிமை பெற்றுத்தந்ததில் பெறும் பங்கு வகிக்கின்றது. 

குழந்தை பிறப்பு சம்பந்தமான பால்நிலை சுகாதாரம் எனும் பொருளில் மலையகத்தில் சுகாதார சேவை முறைமையை உலகத்திற்கான வைத்தியர்கள் எனும் பிராந்திய அமைப்பு இலங்கையில் செயற்படும் தொண்டு ஸ்தாபனமான மன்ற அபிவிருத்தி அமைப்பும் இணைந்து வழங்கவுள்ளன. 

இத்தகவல்கள் பிரான்ஸ் துதூவரின் வாசஸ்தலத்தில் இலங்கை அமைச்சரும் பங்கு பற்றிய கூட்டத்தில் பெறப்பட்டது. 

இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் மலையக மக்களின் வாழிவு மிகவும் பின்னடைவில் காணப்படுகிறது. 

தேசிய சுகாதார சேவைகள் மலையக மக்களை முழுமையாக சென்றடையவில்லை. வீட்டு வசதி, தூய குடிநீர், சத்துணவு, கழிவகற்றல் போன்ற விடயங்கள் மலையகத்தில் பின்தங்கியுள்ளன. 

மகப்பேற்று சுகாதாரம் குறித்தும் கர்ப்ப சேய் நலன் குறித்தும் மலையகத்தில் இவ் வமைப்பு ஆராயவுள்ளது. 

இத்தகவல்கள் அரசாங்க தரப்பிடமோ அல்லது மலையகம் பற்றிய அமைச்சுக்களிடமோ பகிரப்படவுள்ளன.  மலையக வைத்தியசாலைகளை தேசிய மயப்படுத்தல் முறை 1996 களில் ஆரம்பிக்கப்பட்டது.