கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நெருங்குவதையடுத்து, நாளை (6) நள்ளிரவு முதல் தனியார் கல்வி வகுப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.

விதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தடை, பரீட்சைகள் நிறைவு பெறும் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. சா/த பரீட்சைகள் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.