ஆண்டிறுதிப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கலாச்சார விழாவிற்கு அழைத்தமைக்கு பெற்றோர் விசனம்

Published By: Digital Desk 7

05 Dec, 2017 | 05:20 PM
image

பாடசாலை மட்டத்தில் ஆண்டிறுதிப்பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்களை கலாச்சார விழாவிற்கு அழைத்தமை தொடர்பாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகம் நேற்றைய தினம் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் கலாச்சார நிகழ்வை நடத்தியிருந்தது. இந் நிகழ்வில் பிரதேச கலைஞர்கள் பலர் பங்கேற்காத நிலையில் பாடசாலை மாணவ மாணவிகளை அழைத்து விழாவை நடத்தியிருந்தனர்.

இது தொடர்பாக பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,

"ஆண்டிறுதிப்பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் பரீட்சைக்கு தோற்றும் மற்றும் தோற்றவுள்ளவர்கள் உட்பட பல மாணவர்களை அழைத்து வந்து கலாசார நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. எமது பிள்ளைகள் உயர்தரத்தில் கற்கின்றனர். எமது பிள்ளைகள் பரீட்சையில் தோற்றுவதையும் அதில் பெறும் புள்ளிகள் தொடர்பாகவும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம்.

இந் நிலையில் கலாசார விழாவில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதனை மறுக்கவில்லை. ஆனால் ஆண்டு இறுதிப் பரீட்சை நேரத்தில் இவ்வாறு அழைத்து வந்தமை தொடர்பிலேயே கவலை கொள்கின்றோம். மக்கள் வரமாட்டார்கள் என்பதனால் மாணவர்களை வைத்து விழா செய்வது சரியான நடவடிக்கையா என்பதனை வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சே தீர்மானிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.

இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளரிடம் கேட்டபோது,

"பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களையே நாம் நிகழ்வுக்கு செல்ல அனுமதித்துள்ளோம். பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தால் நாம் நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02