புகையிரத சாரதிகள் நாளை (6) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

உதவி சாரதிகளை உள்ளீர்க்கும் நடைமுறைகள் சரிவரப் பின்பற்றப்படாமையைக் கண்டித்தே இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றித் தெரிவித்த தொழிற்சங்க பொதுச் செயலாளர் இந்திக தொடங்கொட, தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.