இந்திய அணி இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 410 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டில்லியில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 7 விக்கெட்டுகளை இழந்து 536 ஓட்டங்களைப் பெற்றபோது முதல் இன்னிங்ஸை இடை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களைப் பெற்று 163 ஓட்டங்களால் பின்னிலை வகித்தது.

இதையடுத்து தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இன்றைய 4 ஆம் நாள் ஆட்ட மதிய உணவுவேளையின் பின்னர் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றபோது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டதுடன் 409 ஓட்டங்களுடன் முன்னிலை வகித்த இந்திய அணி இலங்கை அணியை 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடுமாறு அழைத்துள்ளது.

நாளை ஒருநாள் மீதமிருக்க இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 410 ஓட்டங்கள் வெற்றிக்காக தேவைப்படுகின்றன.

இந்நிலையில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் தொடரை சமப்படுத்தும் ஆவாவில் இருக்கிறது இலங்கை அணி, 410 ஓட்டங்களுக்குள் இலங்கை அணியை சுருட்டி தொடரை 2-0 என வெற்றி பெறுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது இந்திய அணி.

தனது  2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

நாளை போட்டியின் ஐந்தாம் நாள்.  போட்டியின் வெற்றியாருக்கென பொருத்திருந்து பார்ப்போம்.